Tuesday, August 11, 2009

1.நன்மை நினை பலனை எதிர்பாராதே

சமுதாயத்தில் நன்று நினைத்து செய்யும் ஒவ்வோரு செயலும் நன்மையிலே முடியும் நன்மை நினை பலனை எதிர்பாராதே என்பது கொள்கையாக இருக்க வேண்டும் இதை சொல்லும் போது ஐயா வலம்புரிஜான் அவர்கள் ஒரு மேடையில் சொன்னது நினைவுக்கு வருகிறது.
ஒரு ஊரில் ஒரு பெரியவர் இருந்தார். அவருக்கு தினமும் யாருக்காவது உதவி செய்ய வேண்டும் அப்படி இல்லை எனில் தூக்கம் வராது தினமும் ஏதேனும் பண முடிப்பாக கட்டி கொண்டு இரவில் யாராவது எதிரில் வருபவரிடம் கொடுப்பது வழக்கம் அப்போது தான் யார் தந்தார்கள் என்பது யாருக்கும் தெரியாது அதை போல அன்று இரவு யாராவது வருகிறார்களா என்று பார்த்து போது ஒரு உருவம் வருவதை கண்டு அதன் கையில் பண முடிப்பை கொடுத்து மறைந்து கொண்டார் . அன்று இரவு உரங்கி விட்டு மறுநாள் காலை அவரிடம் ஒருவன் கூறினான் ஐயா நேற்று இரவு யாரோ ஒரு முட்டாள் ஒரு திருடனிடம் பண முடிப்பை கொடுத்தான் என்று உடனே பெரியவருக்கு மிகவும் வருத்தமாகி போனது.
இன்று அதை போல நடக்ககூடாது என்று நினைத்து அன்று இரவு பண முடிப்போடு நின்றார் எதிரே ஒரு பெண் உருவத்தை கண்டு இதனிடம் கொடுத்தால் தவறு இல்லை என கொடுத்து விட்டு மறைந்தார் மறுநாள் காலை விபரம் அரிய ஒருவனிடம் கேட்டார் நேற்றும் அந்த உருவம் ஒரு வேசிகையில் கொடுத்து என்று கூறியதும் மிக வேதனைபட்டு கொண்டு இன்று பார்த்து கவனமாக இருக்க வேண்டும் என்று அன்று ஒரு வயதான உருவம் கையில் கொடுத்து மறைந்தார் இன்று சரியான உதவி செய்தோம் மகிழ்ச்சி கொண்டு உரங்கி போனார்.
காலை விபரம் அரிய அதிர்ந்து போனார் அவர் அன்று கொடுத்தது அந்த ஊர் பணகார ஜமின்தாரருக்கு வேதனையோடு தனது நண்பனிடம் கூறினார் அவர் நண்பர் நீ செய்த உதவி நன்று ஆனால் அதன் பயன் அரிய முயன்றது தவறு ஆனால் நீ செய்த செயலால் திருடன் திருந்தி நல்லவனாக வாழ்கிறான் அதை போல் வேசி திருந்தி விட்டால் பணக்காரன் பலருக்கு தற்போது உதவுகிறான் எனவே நீ செய்யும் நன்மை அரிய நினைக்காதே என்றார் அதை போல நாமும் இருக்க வேண்டும்.
இப்படிக்கு
க.கனகுராஜேஷ் mcom.,pgdca.,htit.,dmps.,

2 comments:

  1. நண்பா, உன்னுடைய இந்த பதிவு மிகவும் நன்றாக உள்ளது. மென்மேலும் நல்ல படைப்புகளை படைக்க வாழ்த்துகிறேன்

    ReplyDelete
  2. அன்பு நண்பா
    என்னைபற்றிய திருத்தங்களை ஏற்று கொள்கிறேன் வாழ்த்துகளை கடவுளிடம் ஒப்படைக்கிறேன்.
    மிக்க நன்றி எனும் வார்தையில் முடிக்க விரும்ப வில்லை உங்ளின் மன ஓசை மீண்டும் எதிர்பார்கிறேன்

    ReplyDelete