Thursday, August 20, 2009

2.முயற்சித்து பார்.................


தேடல் என்றால் என்ன?
ஒவ்வோரு மனிதனும் ஏதோ ஒன்றை அடைய போராடும் போர்களமே இந்த உலகம் . இதில் எத்துனை விதமான போராட்டங்கள் ஒரு சிலரை கேட்டால் நான் நிம்மதியை தேடி போராடுவதாக சொல்வார்கள் நிம்மதி தேடி நீ ஏன்? போராட வேண்டும். அது உன் கையிலே இருப்பது தெரிவது இல்லை எதையும் போராட்டமாக நினைக்காதே அதிலும் உன் நிம்மதி உள்ளது என நினை. தேடல் அதனுல் எங்கோ போகும்.
ஒரு ஊரில் ஒரு பிச்சைகாரன் ஒருவர் இருந்தான் அவன் நாடோடியாக திரிந்தான். அவர் எப்போழுதும் ஒரே இடத்தி்ல் அமர்ந்து சோம்பேரி போல் இருப்பது மட்டுமே அவரது செயல்.
அவர் கடவுளிடம் தனக்கு பொன்னும் பொருலும் வேண்டும் என வேண்டுவார் ஒரு நாள் அவன் வைத்து இருந்த சட்டையை எலி ஒன்று கடித்தது. இதனை கண்ட அவன் கோபத்தோடு எலியை அழிக்க ஒரு பூனை வாங்கினான் பிறகு பூனைக்கு உணவு வேண்டுமே என தினமும் பால் வாங்கி பார்தான் அவனால் முடியவில்லை அதனால் ஒரு மாட்டை வாங்கி கட்டி போட்டான் பிறகு அந்த மாட்டை பாதுகாக்க ஒரு இடத்தை வாங்கி போட்டு புர்களை வளர்க்க அரம்பித்தான் பிறகு அதனை பாதுகாக்க ஒரு திருமணம் செய்து கொண்டான் பிறகு வாழ்க்கையில் முன்னேற்றம் அடைந்தான் எனவே தேடல் என்பது இருக்கும் வரை முன்னேற்றம் என்ற பாதை நீண்டு கொண்டே போகும்
அது நமது பலத்திற்கு ஏற்ற அளவிர்க்கு இருக்க வேண்டும். அதை மீறும் போது படும் இன்னல்களை அடுத்த பகுதியில் பார்ப்போம்
அன்புள்ள நண்பர்களே எனது தேடலின் தொடக்கம் இது இதை பற்றிய உங்களது கருத்துகளை வெளியிடுங்கள் அப்போழுது தான் என் தேடல் விடை கிடைக்கும்.

இப்படிக்கு
க.கனகுராஜேஷ் mcom.,pgdca.,htit.,dmps.,

2 comments:

  1. என்னுயிர் தோழா ராஜேஷ்,

    உன் பதிவுகள் அனைத்தும் நன்றாகவே உள்ளது, ஆனால் ஆங்கங்கே சில பல எழுத்து பிழைகள் உள்ளது. அதை கவனித்தால் மிகவும் நன்றாக இருக்கும். பதிவுகளை பதிவிடும் போது ஒன்றுக்கு இரண்டு முறை நன்றாக படித்து பார்த்தப்பின் பதிவு செய்யவும்.

    வாழ்த்துக்கள் !!!

    ReplyDelete
  2. பதிவுகளுக்கு தகுந்த labels கொடுத்தால் தேடி பார்க்க எளிதாய் இருக்கும்.

    ReplyDelete