Monday, September 7, 2009

தகுதிக்கேற்ப முயற்சி

அன்புள்ள நண்பர்களே எனது தேடலின் தொடக்கம் மூன்றாம் பகுதியை இதோ! உங்களுடன் நாம் முன்பே சொன்னது போல் எதற்கும் ஒரு தகுதி உண்டு. தகுதி என்பது "என்னால் இன்று காலை ஐந்து இட்லி மட்டுமே சாப்பிட முடியும் ஆனால் கிடைக்கிறதே என்பதற்காக அள்ளி உண்ண முடியுமா" அதுதான் தகுதி அதற்காக ஒரு சிலருக்கு வாழ்க்கை முன்னேற வழி இருந்தும் செல்ல மாட்டேன் என்பது விழி இருந்தும் குருடனாய் அலைவது போன்று வீதியில் சென்றால் நாய்கள் குறைக்கிறதே என்பதற்காக செல்லாமல் இருக்கிறோமா அதை போன்று வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்தி கொள்வதே நல்லது.

இதை பார்க்கும் போது எனக்கு ஐயா சுகிசிவம் சொன்னது எனக்கு ஞாபகம் வருகிறது அரசன் ஒருவன் தன்னிடம் வேலை பார்க்கும் ஒருவனை பார்த்தான் மகிழ்சியாகவும் மனநிம்மதியுடன் வாழ்வதை கண்டு வியந்து தனது மந்திரியிடம் சொன்னான் உடனே மந்திரி அவன் தனக்கும் தன் குடும்பத்திற்கு தேவையானதை உழைக்கிறான் அதனால் அவன் நிம்மதியாக வாழ்கிறான் இனி அவனுடைய மாற்றத்தை பாருங்கள் என மந்திரி கூறி விட்டு அருகில் இருந்த பணியால் ஒருவனை அழைத்து அந்த வேலைகாரன் வீட்டு வாசலில் ஒன்பது தங்க நாணயத்தை ஒரு முடிப்பாக போட சொன்னார் அதை போல பணியாலும் செய்தான். மறுநாள் பொன் முடிப்பை கண்ட அந்த வேலையால் அதில் ஒன்பது நாணயம் மட்டுமே உள்ளதே ஒரு நாணயம் குறைகிறதே அந்த ஒன்றை சேர்த்தால் பத்தாகும் என அன்றிலிருந்து கடுமையாக உழைத்தான் வீட்டில் யாருடன் சரியாக பேசுவது இல்லை எல்லோரிடம் கடுமையாக நடந்து கொண்டான் நிம்மதியின்றி தவித்தான் இதை கண்ட அரசன் நம்மிடம் உள்ள தகுதிக்கேற்ப முயற்சிக்க வேண்டும்.

அன்பு நண்பர்களே என்னிடம் ஒரு நண்பர் கேட்டார் நீ தேடல் எனும் தலைப்பை எடுத்து விட்டு பணத்தை அளவாதேடு என்கிறாயே என்றார் அதற்கு நான் கூறியது தேடல் என்பது பணம் மட்டுமே அல்ல பல தேடல்கள் உள்ளன அதை தொடங்கும் போது அதனுல் பணமும் உன்னை வந்து அடையும்

இப்படிக்கு
க.கனகுராஜேஷ் mcom.,pgdca.,htit.,dmps.,
wataniya in govt kuwait

1 comment:

  1. ஹாய் ராஜேஷ், மிகவும் அருமையான பதிவு. நன்றி ராம்

    ReplyDelete